14338 மக்கள் சேவையில் 3 ஆண்டுகள்.

சோதீ மணிவண்ணன் (இதழாசிரியர்). வவுனியா: வவுனியா நகர சபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (கொழும்பு 2: வெட் பிரின்ட், 96, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை). (6), 76, (24) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21 சமீ. வவுனியா நகரசபை இயங்கிய ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியான 04.04.1994 முதல் 04.04.1997 வரையிலான நிர்வாகக் காலத்தில் அதன் சமூகப் பணிகள் பற்றிய புகைப்பட ஆவணங்களுடன் கூடிய மக்கள் அறிக்கையாக இம்மலர் வெளிவந்துள்ளது. இம்மலரின் வெளியீட்டுக் குழுவில் வி.எஸ்.எஸ்.செல்வராஜா, சு.விஜயதாஸ், வே.வசந்தகுமார், திருமதி சோதீ மணிவண்ணன், செல்வி சு.ராதிகா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34506).

ஏனைய பதிவுகள்

15148 ஆறாந்தரப் படவேலை சமூகக் கல்வி.

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, பெப்ரவரி 1981, 1வது பதிப்பு, ஜனவரி 1979. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்). 28 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள்,