14340 இளந்தளிர்-6.

சுதாகரன் ரஜிதா, வ.கபிலன். யாழ்ப்பாணம்: கந்தையா கனகம்மா நிதியம், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி ஒழுங்கை). (4), ஒஒ, 106 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. தெளிந்த அறிவும் துணிவும் தம் மக்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இப்பிரதேச மாணவர்களும் மக்களும் தத்தம் சிந்தனையில் ஊற்றெடுக்கும் படைப்புக்களையும், இலக்கியவாதிகளின் கருத்துக்களையும் சேர்த்துத் தொகுத்து, கந்தையா கனகம்மா நிதியம், ‘இளந்தளிர்” என்ற தொடர் இதழின் வாயிலாகப் பதிவுசெய்து விநியோகித்து வருகின்றது. அவ்வகையில் வெளிவந்துள்ள ஆறாவது இதழ் இதுவாகும். இவ்விதழில் இப்பிரதேசத்தின் சான்றோனாகிய திரு. மு. கந்தப்பிள்ளை அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாக தேர்ந்துள்ளனர். மேலும், பல்வேறு போட்டிகளில் பரிசுபெற்றவர்களின் விபரங்களுடன் பொதுத் தேர்வுகளில் சிறப்புச் சித்தி எய்திய தம் பிரதேச மாணவர்களின் விபரங்களையும் சேர்த்து கௌரவித்துள்ளனர். வாழ்த்துச் செய்திகள், நிதிய அறிக்கைகள், பலவினக் கட்டுரைகள் என்பன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுள், செல்லப்பா சுவாமிகள், கற்றாங்கு வாழ்தல் நன்றே, மரங்களும் மண்ணின் மைந்தர்களும், எழுவோமடா தம்பி, சந்திரன், அப்பா, தலைவராவோம், கசடறக் கற்போம், நோயின்றி வாழ்வோம், வாசிப்போம் வாருங்கள், மரங்கள் வளர்ப்போம், எண்ணும் எழுத்தும் கற்றிடுவோம், வீட்டுச் சூழலை கற்றற் சூழலாய் மாற்றுவோம், கிராமத்து நிலமும் மனிதர்களும், ஆங்கிலக் கல்வி-ஒரு ஆய்வு நோக்கு, கிராமங்களில் பொருளாதாரம், கல்வி, ஒழுக்கம் என்பவற்றைக் கட்டியெழுப்புதல், குடும்பம் குதூகலமானதா?, எழில் கொஞ்சும் சுவிட்சர்லாந்து, சந்தோஷம் தரும் சயிக்கிள் சவாரி போவோம் ஆகிய கட்டுரைகளும் உள்ளடங்குகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63631).

ஏனைய பதிவுகள்

14985 யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3.

வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி). 209 பக்கம், விலை: ரூபா 390.,

12328 – பாடசாலைகளில் முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்தல்.

ஏ.எஸ்.பாலசூரிய (ஆங்கில மூலம்), M.H.M.யாக்கூத், M.P.M.M.ஷிப்லி, M.H.M.ஹஸன் (தமிழாக்கம்), மா.செல்வராஜா (பதிப்பாசிரியர்). மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1994. (மகரகம: வெளியீட்டுத்துறை, தேசிய கல்வி நிறுவகம்).