க.தர்மசேகரம் (பிரதம ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கருவி: மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையம், இல. 1166/15, அருளம்பலம் ஒழுங்கை, நல்லூர் வடக்கு, 1வது பதிப்பு, மார்ச் 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×17.5 சமீ., ISDN: 978- 955-23-0019-3, ISSN: 2513-2989. மாற்றுத் திறனாளிகள் தொடர்பான தகவல்களைத் தாங்கி வெளிவரும் ‘வலு” காலாண்டுச் சஞ்சிகையின் ஜனவரி-மார்ச் 2020 இதழ், 25ஆவது இதழாக வெளி வந்துள்ளது. பிரதம ஆசிரியராக க.தர்மசேகரம் அவர்களும், நிர்வாக ஆசிரியராக நா.கீதாகிருஷ்ணன் அவர்களும், ஆசிரியர் குழுவில் செ.சசிராஜ், ச.க.தேவதாசன், செ.பிரிந்தாபரன், திருமதி சு.சுபோதினி, திருமதி இ.ஸ்ரீரங்கநாயகி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதழ் குழுவின் ஆலோசகராக கணபதி சர்வானந்தா பணியாற்றியுள்ளார். தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில், மாற்றுத் திறனாளிகள் தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் வாசகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற ஒரு சிறப்பான தனித்துவத்தை ‘வலு” தன்னகத்தே கொண்டுள்ளது.