எஸ்.குருபாதம். சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத் தூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (சென்னை 14: பாவை பிரின்டர்ஸ், 16 (142), ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை). எii, 500 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 450. அளவு: 22.5×15 சமீ., ISDN: 978-93-8805-050-0. ஒருவர் கருவாக இருந்து வளரும் போது அவருக்குள் சென்ற செய்திகள் என்ன? சிசுவாக, குழந்தையாக மனதில் பதிந்தவை என்ன? வளர, வளர உணர்ந்தவை என்ன? சிறு வயதில் தங்களைப் பற்றி இருந்த எண்ணம்தான் என்ன? அவர்கள் ஆர்வம் என்ன? அவர்களில் மறைந்துள்ள நுண்ணறிவு, ஆற்றல்கள் என்ன? இதற்கான விடையை அறிய முற்பட்டவேளையில் ஆசிரியர் சந்தித்தஅனுபவங்களை, வாசித்து அறிந்தவைகளை, தனது ஆய்வுகளைத் தொகுத்து எல்லோருக்கும் பொதுவான, அவசியமான ‘குழந்தைகளை வளர்க்காதீர்கள், வளரவிடுங்கள்,” என்ற பெயரில் பெற்றோர், பாதுகாவலர்களுக்காக வெளி யிட்டுள்ளார். சிறார்களைப் பற்றி, கருப்பையிலிருந்து ஒரு சிசுவின் குரல், குழந்தைகளின் குமுறல், குழந்தையின் தனித்துவம், குழந்தையிலிருந்து ஜனநாயகம் பிறக்கிறது, குழந்தைகளின் உரிமை, பிள்ளைகளை உணர்ச்சிமயமான கவசத்தை உடைத்து வெளியே வரவிடுங்கள், எதிர்கால வாழ்விற்கு ஆயத்தமாகும் குழந்தை, இயற்கையும் இயல்பும் இணைந்த பராமரிப்பு, பிள்ளை பராமரிப்பு ஆன்மீகம் போன்றதே, வீட்டை பிள்ளைக்கு ஏற்ற மாதிரியாக அமையுங்கள், ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நிர்ணயிப்பது அவரவர் குழந்தைப் பராயமே, குழந்தைகளை அவர்களது சுதந்திரத்திலேயே இருக்க வழிகாட்டுங்கள் என இன்னோரன்ன 55 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.