14348 சுற்றாடல் நிலைமை அறிக்கை: இலங்கை-2001.

ஐக்கிய நாட்டுச் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம். தாய்லாந்து: ஐக்கிய நாட்டுச் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம், ஆசிய பசுபிக் பிராந்திய வள நிலையம், (UNEP-RRC.AP), அவுட்ரீச் பில்டிங்-தொழில்நுட்பத்துக்கான ஆசியன் நிறுவனம், த.பெ.எண் 4, கெலோங் லுவாங், பத்தும் தனி 12120, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு: கல்யாணி கிராப்பிக்ஸ்). (10), 168 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ., ISDN: 92-807-2016-3. நிறைவேற்றுச் சுருக்கம், இலங்கையின் சுற்றாடல்-முழுமைப் பார்வை, பிரதான தேசிய சுற்றாடல் பிரச்சினைகள், முன்னோக்கு ஆகிய நான்கு பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, பிரதான தேசிய சுற்றாடல் பிரச்சினைகளாக மண்ணரிப்பினால் நிலவளம் குன்றல், கழிவு அகற்றுதல், உண்ணாட்டு நீர் மாசுறுதல், உயிர்ப் பல்வகைமை குறைதல், கரையோர வளங்கள் குறைவடைதல் ஆகிய ஐந்து விடயங்களை அடையாளப்படுத்தி அறிக்கையிடுகின்றது. அனுபந்தங்களாக வரைவு படங்கள், தலைப்பு முதற் சொற்கள், குறியீடு, தேசிய சுற்றாடல் நிலை அறிக்கையின் அம்சங்கள், தேசிய சுற்றாடல் அறிக்கை பயிற்சி நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களின் பட்டியல், தேசிய சுற்றாடல் ஆராய்ச்சியாளர் குழுக்கள், பங்குபற்றியவர்களின் பட்டியல், பங்களித்தவர்களின் பட்டியல் ஆகியவற்றை சேர்த்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35847).

ஏனைய பதிவுகள்