14349 அரசியலும் கல்வியும்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park). viii, 148 பக்கம், விலை: ரூபா 460., அளவு: 21×15 சமீ., ISDN: 978-955-685-141-0. அரசியல், பொருளியல் பண்பாட்டியல், சமூகவியல், தொழில்நுட்பவியல், உளவியல், தத்துவவியல் முதலிய துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் சமகாலக் கல்வியில் பல்வேறு எழுவினாக்களை, விமர்சனங்களை முன்வைக்கின்றது. மேலும் பின்காலனியச் சூழலில் இனக்குழும அடையாளங்களை முன்னெடுத்தல் ஒரு முக்கிய செயற்பாடாகவும் மாற்றம் பெற்றுள்ளது. இந்நூல் அரசியலையும் கல்வியையும் ஒன்றிணைத்து புதிய நோக்கில் ஆராய்வதற்கான களங்களை இன்னும் தெளிவாக அடையாளம் காட்டுகின்றது. இதில் அரசியலும் கல்வியும், அரசியலும் கல்வியும் பிளேட்டோவும், மக்களாட்சியும் கல்வியும், மார்க்சியமும் கல்வியும், புதிய இடதுசாரி இயக்கமும் கல்வியும், அரசியலும் கல்வியும் போலோபிரேரியும், பூக்கோவின் நோக்கில் அரசியலும் கல்வியும், சிவில் சமூகமும் கல்வியும், தேசியவாதமும் கல்வியும், பின்நவீனத்துவமும் கல்வியும், பூகோள அரசியலும் கல்வியும், தேசிய இனக்குழுமமும் கல்வியும், தாராண்மைவாதமும் சமகாலக் கல்வியும், மொழிக் காலனித்துவம், அறிவும் அதிகாரமும், மனித உரிமைகளும் கல்வியும், கல்விக் கொள்கையாக்கம், பிரதேசவாதமும் கல்வியும், தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி ஆகிய 19 தலைப்புகளில் விரிவாக எழுதப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 65003).

ஏனைய பதிவுகள்