சத்திஸ்சந்திர எதிரிசிங்க (சிங்கள மூலம்), மு.துரைசாமி (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (17), 18-135 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISDN: 978-955-30- 8620-4. இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தில் வீழ்ச்சியடையும் கல்விநிலை, ஒழுக்கச் சீர்கேடுகள் என்பவை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஆசிரியரின் வகிபாகம் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கும் உயர்ந்த சமூகப் பெறுமானங்களுக்கும் அச்சமூகத்தின் ஆசிரியர்களின் பொறுப்பு மிகவும் முக்கியமாகும் என்ற அடிப்படையில் இந்தச் சீர்கேடுகளை எவ்வாறு எதிர்காலத்தில் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதை கல்விச் சிந்தனை மூலங்களைக் கருத்திற்கொண்டு இந்நூலாசிரியர் தெளிவாகவிளக்கியுள்ளார். பிள்ளைகளின் கற்றல் வழிகாட்டியாகவுள்ள ஒவ்வொரு ஆசிரியரும் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள், தீர்வுகள் பற்றி இந்நூலில் குறிப்பிடுகிறார். பெற்றோரின் வகிபாகமும் இங்கு கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. தனியாக ஆசிரியரால் மாத்திரம் இலங்கையின் கல்விசார் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கமுடியாது என்பதையும் நூலாசிரியர் வலியுறுத்துகின்றார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65501).
Beste Echtgeld Slots inoffizieller mitarbeiter Test: Diese Top Spielautomaten im Online Kasino
Content Konnte ich einen Angaben zu einen Auszahlungsquoten sehr wohl zuversicht? OCG – Get up to $20,000 as part of Bonuses Bewertungskriterien pro unser besten