14350 ஆசிரிய வகிபாக விவரணம்.

சத்திஸ்சந்திர எதிரிசிங்க (சிங்கள மூலம்), மு.துரைசாமி (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (17), 18-135 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISDN: 978-955-30- 8620-4. இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தில் வீழ்ச்சியடையும் கல்விநிலை, ஒழுக்கச் சீர்கேடுகள் என்பவை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஆசிரியரின் வகிபாகம் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கும் உயர்ந்த சமூகப் பெறுமானங்களுக்கும் அச்சமூகத்தின் ஆசிரியர்களின் பொறுப்பு மிகவும் முக்கியமாகும் என்ற அடிப்படையில் இந்தச் சீர்கேடுகளை எவ்வாறு எதிர்காலத்தில் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதை கல்விச் சிந்தனை மூலங்களைக் கருத்திற்கொண்டு இந்நூலாசிரியர் தெளிவாகவிளக்கியுள்ளார். பிள்ளைகளின் கற்றல் வழிகாட்டியாகவுள்ள ஒவ்வொரு ஆசிரியரும் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள், தீர்வுகள் பற்றி இந்நூலில் குறிப்பிடுகிறார். பெற்றோரின் வகிபாகமும் இங்கு கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. தனியாக ஆசிரியரால் மாத்திரம் இலங்கையின் கல்விசார் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கமுடியாது என்பதையும் நூலாசிரியர் வலியுறுத்துகின்றார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65501).

ஏனைய பதிவுகள்

12678 -பொது முதலீடு 1991-1995.

கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு. கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி). (4), 150

14167 மத்திய மாகாண இந்து மாமன்ற இந்து கலாச்சார நிலையத் திறப்பு பவிழா சிறப்பு மலர் 12.06.1983.

செ.நடராஜா, தி.சிவசுப்பிரமணியம் (இணை ஆசிரியர்கள்). கண்டி: இந்து கலாச்சார நிலையம், மத்திய மாகாண இந்து மாமன்றம், பேராதனை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1983. (கண்டி: நந்தன் அச்சகம், இல. 8, காசில் ஹில்

12264 – நீதிமுரசு 2010.

இதழாசிரியர் குழு. கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 6: எஸ். பி.கிராப்பிக்ஸ்). xv, 245 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

12439 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1990.

வெ.சபாநாயகம் (மலர்க் குழு சார்பாக). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி இராஜாங்க அமைச்சு, 1வது பதிப்பு, 1990. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு). (52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: