14351 உசாத்துணையிடல் பாணிகள்: APA உசாத்துணையிடலுக்கான வழிகாட்டல் குறிப்புளுடன்.

ப.மு.நவாஸ்தீன், M.U.M.ஸபீர். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 20.5×15 சமீ., ISDN: 978-955-0958-21-4. யுPயு உசாத்துணையிடல் பாணி, 6ஆம் பதிப்பு (APA Referencing style, 6th Edition) என்பது இன்று சமூக விஞ்ஞானங்களிலும் கல்வி, வர்த்தகம் போன்ற பிற துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் நியமமான முறையாகும். இந்நூலில் இவ்வகை உசாத்துணையிடல் நியமங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அறிமுகம், மேற்கோள் காட்டல், உசாத்துணை மற்றும் நூல்விபரப் பட்டியல், குறிப்புரை நூல்விபரப் பட்டியல், குறிப்புரை நூல்விபரப் பட்டியல் வகைகள், உசாத்துணையிடல் பாணிகள், எந்த உசாத்துணை முறையினைப் பயன்படுத்தவது?, உசாத்துணை பாணிகளும் நவீன தொழினுட்பமும், APA உசாத்துணையிடல் பாணி, உசாத்துணைகளை கட்டுரைப் பந்திகளில் மேற்கோள் காட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள், உசாத்துணைகளை கட்டுரைப் பந்திகளில் மேற்கோளிடல்: விசேட சந்தர்ப்பங்கள், உசாத்துணைகளில் இருந்து கட்டுரை உட்பந்திகளில் எடுத்துக்காட்டல் (ஞரழவயவழைn) மேற்கொள்ளல், உசாத்துணைப் பட்டியல் தயாரித்தல்: அடிப்படை விதிகள், உசாத்துணை பட்டியல் தயாரித்தலுக்கான வழிகாட்டல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் விபரிக்கப்பட்டு இறுதியில் உதாரணங்கள் வழிகாட்டல் உதாரணங்கள் என்பனவற்றுடன் விளக்க மளிக்கப்பட்டுள்ளன. இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 131ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Ideas on how to Bet on Pony Racing

Content Expertise Effects – vuelta a espana 2024 riders The fresh Role Of the Bookie In the Bet Jargon Faq’s To possess Gambling Words Void