14353 தமிழ் கற்பித்தலில் உன்னதம்: ஆசிரியர் பங்கு.

கார்த்திகேசு சிவத்தம்பி. வட்டுக்கோட்டை: தம்பிப்பிள்ளை சிவமோகன், தர்ஷனா பிரசுரம், வட்டு மேற்கு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 36 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ. இன்றைய நிலையில் தமிழைத் தாய்மொழியாகக் கற்பித்தலில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றிய ஓர் ஆய்வு. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண் கலைத்துறைத் தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி பணியாற்றிய 1990களில் எழுதப்பட்டது. பின்னாளில் இதே தலைப்பில் இந்நூல் 58 பக்கங்களில் விரிவாக எழுதப்பெற்று நியு செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் 1996இலும், மேலும் விரிவாக 78 பக்கங்களில் இற்றைப்படுத்தப்பட்டு 2001இல் சென்னை, தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலமும் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப் பிடத்தக்கது. (இந்நூல் புங்குடுதீவு சர்வோதய மத்திய நிலைய நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

12007 – தமிழ் நூல் வெளியிட்டு விநியோக அமையம் : புத்தகக் கையேடு -1

தமிழ்நூல் வெளியீட்டு விநியோக அமையம். கொழும்பு 11: தமிழ்நூல் வெளியீட்டு விநியோக அமையம், இல.4, 3வது தளம், C.C.S.M. கொம்பிளெக்ஸ், 1வது பதிப்பு, ஜுன் 1995. (சென்னை 14: வே.கருணாநிதி, பார்க்கர் கம்பியூட்டர்ஸ்). 76

14845 தமிழ்மறைக் கட்டுரைகள்.

கா.பொ.இரத்தினம் (பதிப்பாசிரியர்). சென்னை 04: இன்ப நிலையம், மயிலாப்பூர், 1வது பதிப்பு, மே 1959. (சென்னை 14: மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு). viii, 9-244 பக்கம், விலை: இந்திய ரூபா 3.50,