மலர்க் குழு. கல்முனை: கார்மேல் பாத்திமாக் கல்லூரி, 1வது பதிப்பு, 1992. (மட்டக்களப்பு: சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்). (10), 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. சுவாமி விபுலானந்தரின் தமிழ்த் தொண்டு (வி.ரி.செல்லத்துரை), பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் தமிழ்ப்பணி (சி.தில்லைநாதன்), விபுலானந்தரும் தமிழ் மொழியும் (சி.மௌனகுரு), பேராசிரியர் உவைஸின் தமிழ்த் தொண்டு((S.H.M.ஜெமீல்), ஆறுமுக நாவலரின் சமய சமூகப் பணியும் தமிழ்த் தொண்டும் (பொ.கணபதிப்பிள்ளை), எண்பது கண்ட F.X.C.(பொன் ஏரம்பமூர்த்தி), புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை (ஈ.சிவானந்தநாயகம்), காடு அழிகிறது கேடு வழிகிறது (A.L.M.பளீல்), அடிகளாரும் புலவர்மணியும் (பரதன் கந்தசாமி), முத்தமிழ் வித்தகரின் கல்விப் பணிகள் (ராதா ஞானரெத்தினம்), இந்துப் பண்பாடு தன்னுள் அடக்கியிருக்கும் கலையம்சம் (வசந்தி சபாநாதன்), தவத்திரு தனிநாயகம் அடிகளார் தமிழ்த் தூது (A.W.அரியநாயகம்), அருட்திரு விபுலாநந்த அடிகளார் வாழ்க்கை வரலாறு (க.வெள்ளைவாரணர்), சுவாமி விபலாநந்தர் மறைவு (மு.கதிரேசச் செட்டியார்) ஆகிய ஆக்கங்களை இச்சிறப்பு மலர் கொண்டுள்ளது. சுவாமி விபுலாநந்தர் (27.03.1892-19.07.1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார். 1992இல் அவரது நூற்றாண்டு விழா உலகெங்கும் கொண்டாடப்பெற்றது. இம்மலரும் அத்தகையதொரு சிறப்பிதழாகும். (இந் நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111773).
Free step three slot Mega Joker Reel Slots Enjoyment
Blogs Reel Harbors And you may Progressive Jackpots The brand new Novices Guide to Multi As to why Enjoy During the An excellent Multislot Casino?