சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்), கே.சிவானந்தமூர்த்தி (இணை ஆசிரியர்), ஏ.எஸ்.சூசை (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். கொம்பியூட்டர் அன் ஓப்செட் பிரின்டர்ஸ், 537 சிவன்கோவில் வீதி, திருநெல்வேலி). (6), 109 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ஆண்டு சந்தா ரூபா 600., அளவு: 25×19 சமீ. இவ்வாய்விதழில் சமகால யாழ்ப்பாணத்து கடவுளர் ஓவியங்கள்- காண்பிய அர்த்தமும், சனரஞ்சக நம்பிக்கையும் (தா.சனாதனன்), வேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள் (கலைவாணி இராமநாதன்), யாழ்ப்பாணத்துப் புனைகதைகளில் சைவம் (மயில்வாகனம் இரகுநாதன்), மத்தவிலாசப் பிரஹசனம் (எஸ்.ஜெகநாதன்), ஈழத்தமிழர் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆய்வு முயற்சிகள்-ஓர் ஆய்வு (கி.விசாகரூபன்), தொழில் வாழ்க்கை யோடிணைந்த கல்வி இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அனுபவங்கள் (அனுஷ்யா சத்தியசீலன்), மீச்செலவு (க.சிவானந்தமூர்த்தி), கடல்மட்ட மாற்றங்களும் கடற்கரை சார்ந்த உருவவியல் அம்சங்களும்: இலங்கையின் வடபிரதேச கரையோர நிலப்பகுதிகளைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு (எஸ். ரி.பி. இராஜேஸ்வரன்), கந்தரோடையிற் கிடைத்த வெண்கல உலோகச் சிலைகள் (செ.கிருஷ்ணராஜா), தஞ்சை நாயக்கர் காசு (ஆறுமுக சீதாராமன்) ஆகிய பத்து ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.