14360 சிந்தனை தொகுதி XIV, இதழ் 3 (நவம்பர் 2004).

கார்த்திகேசு குகபாலன் (இதழாசிரியர்), எஸ்.சிவலிங்கராஜா (இணை ஆசிரியர்), சோ.கிருஷ்ணராசா(நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). (8), 126 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 600., அளவு: 23.5ஒ18 சமீ. இவ்வாய்விதழில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை ஓர் ஒப்பீட்டாய்வு (கே.ரகுநாதன்), போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பு இலங்கையில் கிறிஸ்தவம் (ஞா.பிலேந்திரன்), கல்வியைத் தனியார்மயப்படுத்தலும் சந்தைப்படுத்தலும் (மா. சின்னத்தம்பி), புலம்பெயர்ந்தோர் புனைகதைகள் புலப்படுத்தும் பண்பாட்டுச் சிக்கல்கள் (ம.இரகுநாதன்), ஈழத்து நவீன இலக்கியமும் அறிவியல் கருத்துக்களும் (செல்வி செ.சிவசுப்பிரமணியம்), பொலநறுவைக்கால சைவநாயன்மார் வெண்கலப்படிமங்கள் காட்டும் ஈழத்து வார்வைக் கலைமரபு (செ.கிருஷ்ணராஜா), நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் பட்டப் பெயர்கள்: ஈழத்துத் தமிழ் நாவல்களை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு (கி.விசாகரூபன்), வாஸ்துவும் வீட்டுக் கட்டடக் கலையும் (ஸ்ரீ கிருஷ்ணானந்த சர்மா), இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடும் சமாதானமும் (சமாதான அரசியல் பற்றி ஒரு நோக்கு (கே.ரி.கணேசலிங்கம்), யாழ்.பல்கலைக்கழக நூலகத்தின் முதல்நிலைத் தகவல் வளங்கள்: ஒழுங்கமைப்பு, பயன்பாடு, பராமரிப்பு (செல்வி ஸ்ரீ. அருளானந்தம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Blade Twist Online game

Content 100 percent free Revolves Without Deposit Needed Casinos Coin Grasp Free Revolves and Coins To own Could possibly get 13, 2024 Finest Free Revolves