மா.வடிவேல் (மலர் ஆசிரியர்). மட்டக்களப்பு: திறப்பு விழாக் குழு, அரசினர் ஆசிரியர் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1953. (கொழும்பு 1: சிலோன் பிரின்டர்ஸ் லிமிட்டெட், 20, பார்சன் வீதி, கோட்டை). vi, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. 30.08.1953 அன்று இடம்பெற்ற மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியின் கட்டிடத் திறப்புவிழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். 1948 முதல் மட்டுநகர் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்களின் முயற்சியினால் இம்மலர் சாத்தியமாகியுள்ளது. இதில் முன்னுரை, அறிமுகம், வாழ்த்துரை ஆகியவற்றுடன் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரி வரலாறு (த.செல்வநாயகம்), பிற்போக்கென்றால் என்ன? (சி.கந்தசாமி), தமிழ் ஆசிரியன்- பாட்டு (மு.தங்கசாமி), மட்டக்களப்புத் தமிழ் (எப்.எக்ஸ்.சி.நடராஜா), ஐன்ஸ்ரைனும் பிரபஞ்சமும் (எஸ்.சிதம்பரப்பிள்ளை), இலங்கையிற் கண்ணகி வழிபாடு (க.கணபதிப்பிள்ளை), தமிழ் மக்களும் அவர் கவின் கலைகளும் (தனிநாயக அடிகள்), ஆசிரியர் கடமை அன்றும் இன்றும் (பீ.சவரிமுத்து), திராவிட மக்களின் ஆதித் தாயகம் (வண. எச்.ஈ.டேவிட்), ஆசிரியர் கலாசாலை-பாட்டு (மூனா கானா), பேச்சுப் பாடங் கற்பிக்கும் ஆசிரியர் பேச்சு (எஸ்.பூபாலபிள்ளை), வுhந வுநயஉhநச யனெ ர்ரஅயn Pநசளழயெடவைல (நு.ளு.தம்பிராசா), பழந்தமிழர் பழக்க வழக்கம் (எஸ்.தம்பிராசா), அன்னை கொஞ்சும் மொழி (மா.வடிவேல்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (நூலகம் நிறுவன இணையத்தள நூலக சேர்க்கை இலக்கம் 74350. இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்திலும் பார்வையிடப்பட்டது).
$5 Minimum Put Gambling establishment in australia Greatest 5 Dollars AUD Minimum Put Online casino
Content Casino promotions deposit 1 get 20 – Enjoy gold ahoy $1 deposit Totally free Undefeated Xerxes On the internet Position Demonstration Online game Gold