வீ.மன்மதராஜன், கு.சாந்தகுமாரன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2005. (பேராதனை: வினோ அச்சகம்). (24), 98 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19.5 சமீ. பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தின் இந்து மாணவர் சங்கத்தின் இறைபணிகளுள் ஒன்றாக விளங்குவது இந்து தர்மம் மலர் வெளியீடாகும். இம்மலரில் வாழ்த்துக்கள், ஆசியுரைகள், செயற்குழு அறிக்கைகள் ஆகியவற்றுடன் ‘வாழ்வியல்” என்ற பகுதியில், நம் உடம்பே ஆலயம் (தி.ஆனந்தமூர்த்தி), சௌர வழிபாடு (நாராயணன் மல்லிகா), ஆன்மீக வாழ்வு (ஜெ.நிவேதன்), காயமேகோயிலாக (ந.பாலமுரளி), சைவத்தமிழர் வாழ்வியலில் தாய்மை (செல்வி மகியினி பாலச்சந்திரன்), கிராமிய வழிபாட்டில் கண்ணகி (திரவியநாதன் தீலிபன்), திருவாசகமென்னுந்தேன் (க.தர்சினி) ஆகிய ஆக்கங்களும், ‘சமூகவியல்” என்ற பகுதியில், இந்து மதமும் இந்து மானுடரும் (சி.சிவசேகரம்), புதைந்து கொண்டிருக்கும் எமது கலாசாரம் கட்டியெழுப்பப்படுவது எப்போது (சிவறூபி பஞ்சாட்சரம்), சட்டமும் சமூகமும் (நவரத்தினம் சிவகுமார்), நமது சமய கலாசார அம்சங்கள் எங்கே போகின்றன? (ந.சங்கர்) ஆகிய ஆக்கங்களும், ‘ஆய்வியல்” என்ற பகுதியில், இந்து மதம் கூறும் அரசியல் சிந்தனைகள் (ச.பாஸ்கரன்), திருவாசகம், கிறிஸ்தவம், மேலைத்தேசம் ஒரு பண்பாட்டுக் கலப்புப் பார்வை (மா.ரூபவதனன்), மகாகவி பாரதியும் ஆத்மீக அடித்தளமும் (துரை.மனோகரன்), பொலநறுவைக் கால வெண்கலப் படிமங்கள் அப்பர் படிமத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு குறிப்பு (இரா.வை.கனகரத்தினம்) ஆகிய ஆக்கங்களும், ‘படைப்பியல்” என்ற பகுதியில், குன்றத்து வேலனே குறிஞ்சிக் குமரா (எஸ். சுதாகரன்), குறிஞ்சிக் கோலங்கள் (வே.சனாதனன்), அருள் புரிவாய் கதிர்வேலா (மாதங்கி பாலசுப்பிரமணியம்), நாம் ஏன் விளக்கு ஏற்றுகின்றோம்? (ந.ஜசீவன்), மன்னிக்க வேண்டுகிறோம் (பெ.தேவப்பிரியானி), அன்பின் நிலையது உயர் நிலை (சி.சிவசீலன்), குறிஞ்சிச்சாரல் 2005 (தொகுப்பு: வி.மன்மதராஜன்), கலைத்திட்டங்களுக்கு வெளியே பட்டதாரி மாணவர்களின் ஆக்கத்திறன் – (வ.மகேஸ்வரன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37976).
Sea Twist Slot Series Shows Groundswell Launch Success
Blogs How to get Totally free Spins At the United states Online casinos Mr Twist Harbors Free Mobile Version and Gambling establishment Comment Support During