14369 இந்து நாதம்: 1997.

கணேசன் சாந்தகுமார் (இதழாசிரியர்). கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: யாசீன் பிரின்டர்ஸ்). (88) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5 சமீ. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் இந்து மாணவர் மன்றம், 10.10.1997 அன்று, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடத்திய கலைமகள் விழாவின்போது இவ்வாண்டு மலர் வெளியிடப்பட்டது. வழமையான ஆசிச் செய்திகளுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும், நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. வாணி விழா (து.ஆதிரையன்), அருள் புரியும் அன்னை (சிவபாதசுந்தரம் திருப்பரன்), விவேகானந்தர் (த.திருக்குமார்), ஆலயத்தொண்டு (பாலக்குமாரன் சபேசன்), ஆறுமுகநாவலரின் சமயப் பணி (சு.சுரேஸ்குமார்), நாவலரின் சமயப்பணிகள் (ஸ்ரீ தர்னீஷ்குமார்), வையகம் மீதுன் புகழ் வாழ்க (ஈ.ஜெயந்தன்), அன்பே சிவம் (துரைசிங்கம் கஜன்), கலைமகள் விழா நிகழ்ச்சி நிரல், என் ஆசிரியர்களுக்கு நன்றி (சி.பாலதரன்), ஈழத்தில் இந்து சமயத்தின் இன்றைய நிலை (கணேசன் சாந்தகுமார்), விவேகானந்தரின் சமய மறுமலர்ச்சி (கு.காண்டீபன்), நவராத்திரி மகிமை (கணேசன் காந்தகுமார்), ஈழத்தில் இந்து சமயத்தின் இன்றைய நிலை (லோ.நிமலன்), இந்து சமயத்தவருக்கே உரித்தான சிறப்பம்சங்களும் இந்துமத வாழ்க்கை நடைமுறைகளும் (சிவா.கிருஷ்ணமூர்த்தி), சைவ சித்தாந்த சிந்தனைகள் (திருமதி.பு.ஞானலிங்கம்), எல்லோரும் வாழவேண்டும் (த.மனோகரன்) ஆகிய படைப்பாக்கங்களை இம்மலரில் இடம்பெறச் செய்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38005).

ஏனைய பதிவுகள்

Zodiac Salle de jeu

Ravi Hein Jouer Quelque peu Des français Options , ! Remarques : Cdeux Sans nul Annales Étant un 50 Périodes Via Book Of Foutu Salle