மலர்க் குழு. கொழும்பு: இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (34), 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5 சமீ. பொன்விழாச் சிறப்பு மலரில் ஆசிச் செய்திகளைத் தொடர்ந்து வானளாவும் எம் கல்லூரி, கால அட்டவணை, மனப்பதிவில் சில துளிகள், சமயம், இலக்கியம், விழுமியங்கள், அறிவியல், கவிதைத் துளிகள், கலைகள், பொருளாதாரம், ஆளுமைக்கு உரமிடுபவை, கல்லூரிக் கண்ணோட்டம், படங்கள் எனப் பல்வேறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு அவ்வப் பிரிவுக்குரிய ஆக்கங்கள் வகுத்துததரப்பட்டுள்ளன. மனப்பதிவில் சில துளிகள் என்ற பிரிவில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, இ.கலாமோகன்,கோ.ஜெனார்த்தனன், சி.க.இந்திரராசா, வித்துவான் வ.செல்லையா, டி.ஆர்.இராஜலிங்கம், டீ.ளு. சர்மா, ஐ.கஜமுகன், ளு.பு.ளு.அருளானந்தன். சந்திரபவானி இராமச்சந்திரா ஆகியோர் கல்லூரி பற்றிய தமது மனப்பதிவுகளை எழுதியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 34802).