வே.மதியழகன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவில் மத்திய கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 2015. (இணுவில்: வைரஸ் பிரின்டர்ஸ்). lvi, 240 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. இம்மலரில் ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் என்பவற்றுடன் கல்லூரி தொடர்பான வரலாறு, கல்வித்துறை சாதனைகள், இணை பாடவிதானச் செயற்பாடுகள் ஆகியவை அறிக்கையிடப்பட்டுள்ளன. மாணவர் பகுதியிலமாணவமணிகளின் 39 படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அறிஞர் பகுதியில் ஆசிரியத்துவம் தொடர்பாக, நவீன கல்வியில் ஒரு கருத்து -வினைப்பாடு உற்றறி ஆசிரியம், பாடசாலை மட்டத்தில் ஆசிரியர் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லலில் திட்டமிட்ட அணுகுமுறைகள், சிறுவர் இலக்கியப் பரப்பில் பாரதியாரின் பங்களிப்பு, உளவியல் ஆய்வு முறைகளில் உற்றுநோக்கல், இன்றைய ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படும் வாண்மைத்துவத் தேர்ச்சிகள், பாடசாலை மட்டத்தில் அணிகளை முகாமைசெய்தல் ஒரு யதார்த்த அணுகுமுறை, கணிதத்தில் கணிதமேதை இராமானுஜரின் பங்களிப்பு ஆகிய ஏழு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் பகுதியில் பாடசாலை ஆசிரியர்களின் பாடத்திட்டத்துடன் கூடியதும் பொது அறிவுக்கு உட்பட்டதுமான 26 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.