லோஷினி தர்மலிங்கம் (மலராசிரியர்). கொழும்பு 2: நால்வர் சமயப பாடசாலை மாணவர் மன்றம், கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (96) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ. 13.12.1998 அன்று கொழும்பு நால்வர் மணிமண்டபத்தில் நடைபெற்ற நால்வர் சமய பாடசாலை மாணவமணிகளின் கலைவிழாவையொட்டி இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. ஆசியுரை, வாழ்த்துரைகளுடன் இச்சிறப்பிதழில் மாணவர்களின் ஆக்கங்களுக்கு முன்னுரிமையளித்துத் தொகுக்கப்பட்டுள்ளன. நால்வர் செய்த அற்புதங்கள் (S.உதயசந்தர்), ஞான விழிகள் (சுமதி செந்தில்குமார்), அன்பின் மகிமை (ளு.அகிலேஸ்வரி), கூசாதே கேள் ஏற்றுக்கொள் (வி.கஜேந்திரன்), திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், திருவைந்தெழுத்தின் மகிமை (யு.சுதர்சனி), பாரதியார் (ம.விபுலன்), விளையாட்டு (ச.வனிதா), நான் போற்றும் நால்வர் சமயப் பாடசாலை-கவிதை (தயாபரநாதன் கிருஷ்ணா), நட்பு-கவிதை (பூமிநாதன் இலங்கநாதன்), விழித்தெழு-கவிதை (ஆனந்த மொழி), அதிசயங்கள் (அ.விஜயசித்திரா), அறிவியலும் அழகியலும் வாழ்வின் இரு கண்கள் (பூமிநாதன் பாலநாதன்), வெற்றியின் ரகசியம் (கு.சசிகரன்), சமயமும் சமுதாயமும் (சுப்பையா மிலந்தகுமார்), விநாயகர் பெருமை (ளு.பிரசன்னா), பிரார்த்தனை (சந்திரகாசன் ஞானப்பிரசாந்தன்), மாணவனே (பெ.பூமிநாதன்), மனிதனும் தெய்வீக வாழ்க்கையும் (திருமதி.இராஜேஸ்வரி இராஜேந்திரன்), புராணங்கள் கூறும் சமயக் கருத்துக்கள் (ஆ.வு.சுதர்ஷனி), காலச் சிறகுகளில் கவிதைச் சக்கரங்கள் (இராதாகிருஷ்ணன் சசிதரன்), சிந்தனை புதிர்கள் சில (ஏ.மாதவன்), பிள்ளையார் (சஜீவன்), வாழிய சைவ முன்னேற்றச் சங்கம் (ம.வியாசிகா), தொலைக்காட்சியும் மாணவர்களும் (து.துஷ்யந்தி), கடமையைச் செய் பலனை எதிர்பாராதே (லோகேஸ்வரி நவரட்ணம்), மிருகக் காட்சிச் சாலை (ஏ.மோகனசுந்தர்), ஒன்றே கடவுள் (த.அஜந்தன்), சிவலிங்க வழிபாடு (பிரஷாந்தினி சந்திரகாசன்), ஞான தீபங்கள் (சுயதர்ஷினி சலிம்), ஸ்ரீ ராம கிருஷ்ணரின் மூலம் கடவுளைக் காணுங்கள(நமசிவாயம் முரளிதரன்), சக்தி வழிபாடு (ந.துஷ்யந்தி), அருள் மிகு ஆஞ்சனேயர் (செ.ஐஸ்வர்யா லக்ஷ்மிதேவி), நாளைய தலைவனே உனக்கொரு செய்தி (கிருபாம்பிகை), சுவாமி விபுலானந்த அடிகள் (வி.விஜயதாஸ், விவேக் ஆனந்த்), சமயத்துறைகள் (சுபாசினி), ஓங்கார நாயகனே (சந்திரகாசன் ஞானப்பிரசாந்தன்), ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் (வி.ரதீஷ்), பழம் பெரும் முருகன் ஆலயம் – தொகுப்பு: ரா.மேனகா, கல்வியின் சிறப்பு (ம.சுதன்), சேர். பொன்னம்பலம் இராமநாதனின் ஒப்பற்ற கல்விப்பணி (மு.விஜயகௌரி), விடுகதைகள், திருமுருகன் (ச.திரிபுரா), அருள் வாக்கு (வி.கஜேந்திரன்), சிவஞானத்திற்குப் பிரமாணம் உண்டா (கு.தீபா), சிந்தனைத் துளி (பா.டிலக்சன்), இரண்டு விழாக்கள் (ஆ.முனீஸ்வரன்), 63 நாயன்மார்கள் (அ.சசிக்குமார்) ஆகிய ஆக்கங்களை இம்மலர் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24826).