மலர்க் குழு. புங்குடுதீவு: ஸ்ரீ கணேச வித்தியாசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1951. (யாழ்ப்பாணம்: வே.சுந்தரம்பிள்ளை, விவேகானந்த அச்சகம்). 92 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. பண்டிதமணி க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார், க.சோமசுந்தரப் புலவர், சரவணையூர் ஆ.தில்லைநாதப் புலவர் ஆகியோரின் வாழ்த்துரைகளுடன் கற்பின் தெய்வம் (கா.பொ.இரத்தினம்), யான் கண்ட புங்குடுதீவு (குல.சபாநாதன்), திருநாவுக்கரச நாயனார் (சி.கணபதிப்பிள்ளை), புங்குடுதீவின் கல்வி நிலை- அன்றும் இன்றும் (சி.இ.ச.), மாங்கல்யம் (த.வேதநாயகி), எங்கள் சங்கத்தைத் தரிசித்த பெரியார் சிலரின் குறிப்புகள், எந்நாள் வரும் (சி.ஆறுமுகம்), சமயமும் ஆன்ம ஈடேற்றமும் (சி.சரவணமுத்து), இளமை இன்ப நினைவுகளும் வயோதிபமும் (பொ. கிருஷ்ணபிள்ளை), பொன்னேட்டிற் புகழ்பெற்ற புங்குடுதீவு (மு.ஆறுமுகம்), சேக்கிழார் காட்டிய சைவநெறி (கை.சிவபாதம்), தந்தையும் மைந்தனும் (வீ.வ.நல்லதம்பி), பரிசில் வாழ்க்கை (பொன். அ.கனகசபை), பைத்திய உலகம் (மு.பொ.இரத்தினம்), நாம் விரும்புங் கல்வி (சி.ஆறுமுகம்), திருக்கேதீஸ்வரநாதன் துதி (தா.இராசலிங்கம்), பெண்ணே பெரியவள் (ஸ்ரீமதி என்.நல்லதம்பி), குருதட்சணை (நா.சோமசுந்தரம்), அந்தக் கிண்ணம் (கே.வீ.செல்லத்துரை), கிராமாபிவிருத்தி (ஜே.சீ.அமரசிங்கம்) ஆகிய படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.