14378 மகுடம்: கலை விழா 2008.

இதழாசிரியர் குழு. கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 2: வுhசநந N Pசiவெநசளஇ 50/15, சேர்.ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை). (144) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.07.11.2008 அன்று கொழும்பு சு.ஐ.வு. அலஸ் மண்டபத்தில் நடைபெற்ற டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் வழங்கிய கலைநிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில், அரசியல், ஆன்மீக, அறிவியல்துறைப் பிரமுகர்களின் ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாடசாலை மன்ற அறிக்கைகள் என்பனவற்றுடன், மேற்படி பாடசாலை மாணவர்களின் படைப்பாக்கங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 2008ஆம் ஆண்டுக்குரிய இதழாசிரியர் குழுவில் க. சிந்துஜன், செ.ஷியாம், பா.சஞ்சித், ஐ.ஆர்.எம்.ஆதிப், எம்.ஜுஷான் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்