தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 1 B, P.T. டீ சில்வா மாவத்தை). 108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×20.5 சமீ. அரசறிவியல் மூலதத்துவங்கள், புவியியல், வரலாறு, அளவையியலும் விஞ்ஞான முறையும், இந்து சமயம், கிறிஸ்தவ நெறி, இஸ்லாம், இந்து நாகரிகம், இஸ்லாமிய நாகரிகம், தமிழ் ஆகிய பத்து பாடநெறிகளுக்கான பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. எவ்வாண்டுக்குரிய பாடத்திட்டம் என்பதை அறியக்கூடியதாக ஆண்டுவிபரம் தரப்படவில்லை. முக்கியமாக, இந் நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு விபரமும் நூலில் தவறவிடப்பட்டுள்ளது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39176).