14380 கல்விப்பொதுத் தராதரப் பத்திரம் (உயர்தரம்) ஆண்டு 12-13: இணைந்த கணிதம் பாடத்திட்டம்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: கணிதத் துறை, விஞ்ஞான தொழினுட்பப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (மஹரகம: தேசிய கல்வி நிறுவக அச்சகப் பிரிவு). xii, 84 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×29.5 சமீ. 2017ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் இணைந்த கணிதம் பாடநெறிகளுக்கான பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. இது அறிமுகம், தேசிய பொது இலக்குகள், பொதுத் தேர்ச்சித் தொகுதி, பாடத்திட்டத்தின் நோக்கங்கள், தேசிய பொது இலக்குகளுக்கும் பாடத்திட்ட இலக்குகளுக்கும் இடையேயான தொடர்பு, இணைந்த கணிதம் தொடங்குபவர்களுக்கான அடிப்படைப் பாடநெறி, உத்தேசிக்கப்பட்ட தவணைரீதியான பாடத்திட்டம், விரிவான பாடத்திட்டம், கற்பித்தல்-கற்றலமுறைமை, பாடசாலைக் கொள்கையும் நிகழ்ச்சித் திட்டங்களும், கணிப்பீடும் மதிப்பீடும், கணிதக் குறியீடுகளும் குறிப்பீடுகளும் ஆகிய விடய உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 65683).

ஏனைய பதிவுகள்