தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: சமூக விஞ்ஞானத்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு: NIE Press). x, 56 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 20×29.5 சமீ. 2017ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வரலாறு பாடநெறிகளுக்கான பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாக இந்நூல் வெளி வந்துள்ளது. அறிமுகம், உள்ளடக்கம், தேசிய பொது இலக்குகள், அடிப்படைத் தேர்ச்சிகள், பாட இலக்குகள், தேசிய பொது இலக்குகளுக்கும் பாட இலக்குகளுக்குமான தொடர்பு, பாடசாலை தவணைக்கான திட்டம் தயாரித்தல், பாடத்திட்டம், பாடசாலைக் கொள்கையும் வேலைத்திட்டங்களும், கணிப்பீடும் மதிப்பீடும், பாடத்திட்டத் தயாரிப்புக் குழு ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65685).