14386 க.பொ.த.உயர தரம் வணிகக் கல்வி-2.

அ.சிவநேசராஜா, என்.கே.பாலச்சந்திர சர்மா. கொழும்பு 13: என்.கே.பாலச்சந்திர சர்மா, 160,கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 15: விஜயா அச்சகம், 825ஃ5, புளுமண்டல் வீதி). (6), 150 பக்கம், விலை: ரூபா 140.00, அளவு: 21×14 சமீ. மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் வணிகக் கல்வித் துறையின் விரிவுரையாளரான அ.சிவநேசராஜா, கொழும்பு இந்துக் கல்லூரி ஆசிரியர் என்.கே. பாலச்சந்திர சர்மா ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இரண்டு பாகங்கள் கொண்ட நூல் இது. இவ்விரண்டாம் பாகத்தில் தொழில் கொள்வோர் தொழிலாளர் தொடர்புகள், நுகர்வோர் பாதுகாப்பு, அரசாங்கத்துக்கும் வணிக முயற்சிகளுக்கும் இடையிலான தொடர்பு, முயற்சியாண்மையும் சிறிய நடுத்தர நிறுவனங்களும் ஆகிய நான்கு விடயப் பரப்புகள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38996).

ஏனைய பதிவுகள்

Multiple Diamond Slot Remark 2024

Content Where’s My Perry? To possess Screen 8 What is the Restrict Commission Within the Multiple Diamond? Their Remark To have 5000 Diamond Legend Diamond

15694 கலாலக்ஷ்மி கதைகள்: கதைகளும் குறிப்புகளும்.

கலாலக்ஷ்மி தேவராஜா. யாழ்ப்பாணம்: கலா லயம் பதிப்பகம், இல.68, நீதிமன்ற வீதி, மல்லாகம், 1வது பதிப்பு, மார்ச் 2021. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 228 பக்கம், விலை: ரூபா 400.,