14387 வணிகக் கல்வி: இன்றைய வாணிப நடைமுறை.

வி.சிவா (இயற்பெயர்: வி. சிவானந்தபாலன்). கொழும்பு 6: வி.சிவானந்தபாலன்இ 1வது பதிப்புஇ ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: கார்த்திகேயன் வெளியீட்டகம்இ 501/2, காலி வீதி, வெள்ளவத்தை). (8), 108 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 20.5×14 சமீ. க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வணிகக் கல்வி தொடர்பான மேலதிக பாடநூல். இன்றைய வாணிப நடைமுறைகள் என்ற இந்நூலில் பாடத்திட்டம் தொடர்பான கோட்பாடுகள்இ எண்ணக்கருக்கள்இ என்பவற்றை விட அத்துறைகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகள்இ மாற்றங்களே அதிகளவு முக்கியப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்நூல்இ பலவிடயங்களை இனம்கண்டு விளக்கமளிக்க முற்படுகின்றது. வதிவுள்ளோருக்கான வெளிநாட்டு நாணயக் கணக்குஇ வதிவற்றோருக்கான வெளிநாட்டு நாணயக் கணக்குஇ தன்னியக்க கொடுக்கல் வாங்கல் இயந்திரம்இ வங்கிக் கிளைகளுக் கிடையிலான வலைப் பின்னல்இ அந்நியச் செலாவணிக்கான வங்கிக்கூறுஇ பேஜர்இ இடம்பெயர் வங்கிச்சேவைஇ திறைசேரி உண்டியல்இ திறைசேரி உண்டியலுக்கான மறு கொள்வனவுச் சந்தைஇ அரச முறிஇ தேசிய பாதுகாப்பு முறிஇ மீள் நிதியிடல்இ வைப்புக் காப்புறுதிகள் புதிய தொழிலாளர் சாசனம்இ மக்கள் மயப்படுத்தல்இ தனியார் மயப்படுத்தல்இ வர்த்தகமயப்படுத்தல்இ தேசிய போக்குவரத்து ஆணைக்குழுஇ இன்ரநெட்இ மத்திய வைப்புத் திட்டம்இ இரத்தினக்கல் வியாபார வங்கிஇ தொலைத் தொடர்புக் கம்பெனிகள்இ உரிமம் பெற்ற விசேட வங்கி என இன்னோரன்ன 63 தலைப்புகளில் இன்றைய வாணிப நடைமுறைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 031448).

ஏனைய பதிவுகள்