14389 வணிக புள்ளிவிபரவியல் : மாதிரி எடுப்பும் புள்ளிவிவர அனுமானமும்: க.பொ.த.உயர்தரம்.

பொன்னுத்துரை ஐங்கரன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை ஐங்கரன், இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). (4), 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. கல்விச் சீர்திருத்தத்தில் ஓர் அம்சமாக புதிய பாடத்திட்டத்தில் வணிகப் புள்ளிவிபரவியல் க.பொ.த. உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு ஒரு பாட மாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப் புதிய வணிகப் புள்ளிவிபரவியல் பாடத்தின் மாதிரி எடுப்பும் புள்ளி விபரவியல் அனுமானங்களும் என்னும் பகுதியில் மாதிரி எடுத்தல் முறை, அதன் நன்மை தீமைகள், புள்ளிவிபர மதிப்பீடு, கருதுகோள் சோதனை, கைவர்க்கச் சோதனை, மாறற்றிறன் பகுப்பாய்வு ஆகிய பகுதிகளை உயர்தர மாணவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய இலகு தமிழில் நூலாசிரியர் உதாரண விளக்கங்களுடன் தந்திருக்கிறார். நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணித புள்ளிவிபரவியல் துறையின் விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21424).

ஏனைய பதிவுகள்