14389 வணிக புள்ளிவிபரவியல் : மாதிரி எடுப்பும் புள்ளிவிவர அனுமானமும்: க.பொ.த.உயர்தரம்.

பொன்னுத்துரை ஐங்கரன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை ஐங்கரன், இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). (4), 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. கல்விச் சீர்திருத்தத்தில் ஓர் அம்சமாக புதிய பாடத்திட்டத்தில் வணிகப் புள்ளிவிபரவியல் க.பொ.த. உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு ஒரு பாட மாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப் புதிய வணிகப் புள்ளிவிபரவியல் பாடத்தின் மாதிரி எடுப்பும் புள்ளி விபரவியல் அனுமானங்களும் என்னும் பகுதியில் மாதிரி எடுத்தல் முறை, அதன் நன்மை தீமைகள், புள்ளிவிபர மதிப்பீடு, கருதுகோள் சோதனை, கைவர்க்கச் சோதனை, மாறற்றிறன் பகுப்பாய்வு ஆகிய பகுதிகளை உயர்தர மாணவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய இலகு தமிழில் நூலாசிரியர் உதாரண விளக்கங்களுடன் தந்திருக்கிறார். நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணித புள்ளிவிபரவியல் துறையின் விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21424).

ஏனைய பதிவுகள்

12639 – இலங்கையில் பழப்பயிர்களைப் பாதிக்கும் பீடைகளும் அவற்றைக் கட்டுப்படுத்தலும்.

G.A.W.விஜேசேகர, ஜயந்தா இளங்கோன் மெனிக்கே (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). பேராதனை: விவசாயஅமைச்சு, விவசாயத் திணைக்களம், 1வது பதிப்பு, 2001. (பெரதெனிய: விவசாய அமைச்சின் அச்சகப் பிரிவு, கன்னொருவை). (6), 72 பக்கம், புகைப்படங்கள்,

14167 மத்திய மாகாண இந்து மாமன்ற இந்து கலாச்சார நிலையத் திறப்பு பவிழா சிறப்பு மலர் 12.06.1983.

செ.நடராஜா, தி.சிவசுப்பிரமணியம் (இணை ஆசிரியர்கள்). கண்டி: இந்து கலாச்சார நிலையம், மத்திய மாகாண இந்து மாமன்றம், பேராதனை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1983. (கண்டி: நந்தன் அச்சகம், இல. 8, காசில் ஹில்

12165 – பஜனானந்தம்: திவ்ய த்ரிமூர்த்திகளுக்கு சமர்ப்பணம்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன். கொழும்பு 6: ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆச்ரமம், இலங்கைக் கிளை, 40, ராமகிருஷ்ண வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2002. (கொழும்பு: யுனிவோக்கர்ஸ் பிரின்டிங் வேர்க்ஸ்). (6), 130