14392 கண்ணகி வழிபாடு: பார்வையும் பதிவும்.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: மனுவேதா வெளியீடு, 143/23, எல்லை வீதி, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 274 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 22×16 சமீ., ISDN: 978-955-42694-5-3. கவிக்கோ அவர்கள் இவ்வாய்வு நூலை தன்னுடைய 21 ஆவது நூலாக வெளியிடுகிறார். இந்நூல் தமிழகத்திலிருந்து ஈழம் வரையான கண்ணகி வழிபாட்டின் நீண்ட வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இதற்காகத் தமிழகத்தில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த கோயில்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டதுடன் இத்துறையில் புலமையுடைய தமிழக, கேரள மாநில அறிஞர்களுடன் கலந்துரையாடி தமிழகத்தின் வரலாற்றுப் புலமை வாய்ந்தகண்ணகி வழிபாட்டு ஆலயங்கள் பலவற்றின் புகைப்படங்களையும் வழங்கியுள்ளார். ஈழத்திற்கு கண்ணகி வழிபாடு பரவிய வரலாற்றை விரிவாக ஆராய்ந்து தமிழர்களிடையே கண்ணகி வழிபாடாகவும், சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடாகவும் பரிணமித்த வரலாற்றை ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளார். சேர நாட்டில் (கேரளம்) கண்ணகி வழிபாடு, தமிழகத்தில் கண்ணகி வழிபாடு, இலங்கையில் கண்ணகி (பத்தினி) வழிபாடு, பௌத்த சிங்கள மக்களின் பார்வையில் கண்ணகி (பத்தினி), வடபிரதேச கண்ணகி வழிபாடு, மட்டக்களப்புப் பிரதேச கண்ணகி வழிபாடு, திருக்கோணமலைப் பிரதேச கண்ணகி வழிபாடு, கொம்புமுறி விளையாட்டு, கண்ணகி வழிபாடு: பார்வையும் பதிவும், மட்டக்களப்புத் தேசத்தில் கண்ணகி வழிபாடு மேலோங்கக் காரணம், கண்ணகிக்கு மீண்டும் புகழ்சேர்க்கும் புகார் நகர் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூலை வெல்லவூர்க் கோபால் எழுதியிருக்கிறார். பின்னிணைப்புகளாக வழிபாட்டியலில் கண்ணகியின் வடிவங்கள், ஆய்வின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14158 பருத்தித்துறை கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சித்திரத்தேர் வெள்ளோட்ட சிறப்புமலர் 23.2.2017.

இ.திருமாறக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: தேர்த் திருப்பணிச் சபை, கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பருத்தித்துறை: சிவா ஓப்செட் பிரின்டர்ஸ், வியாபாரிமூலை). xvviiiஇ 33 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

Play the Greatest A real income Slots On the web

Posts Better Online slots games Gambling enterprises Examined Video poker Video game All promotions are only https://777spinslots.com/online-slots/coffee-house-mystery/ relevant to 1 account, address, current email address,

12484 – தமிழருவி 1994:

கலைவிழாச் சிறப்பிதழ். ச.நவாதரன், க.ஜீவலிங்கம், பா.சுகன்னியா (இதழாசிரியர்கள்). மொரட்டுவை: தமிழ் இலக்கிய மன்றம், மொரட்டுவை பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 12: Sharp Graphics Pvt Ltd> D.G.2,Central Road) (96) பக்கம்,