14394 அணிகலன்கள்: தமிழர் பாரம்பரிய அணிகலன்கள் ஓர் விபரிப்பு.

உமாச்சந்திரா பிரகாஷ். கொழும்பு 6: திருமதி உமாச்சந்திரா பிரகாஷ், இல. 51- 4/1, பெரேரா ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (கொழும்பு 6: கே.ஐ.கிரியேஷன்ஸ்). vi, 58 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×17 சமீ., ISDN: 978-624-95089-0-3. 2009இன் பிற்பகுதியில் வீரகேசரி ஊடாக பத்திரிகைத்துறையில் கால்பதித்தவர். ‘கலைக்கேசரி” மாதாந்த சஞ்சிகையின் வாயிலாக ஊடகத்துறையில் தனக்கெனவொரு இடம் பெற்றுக்கொண்டவர். பெட்டகம், நல்லூர்க் கந்தசாமி பெருங்கோயில், வுhந னுளைஉழஎநசல ழக துயககயெ ஆகிய நூல்வரிசையில் இது இவரது நான்காவது நூல். தமிழர் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறும் கலை, கலாசார, பண்பாட்டு விடயங்களுடன் கூடிய தமிழர் பாரம்பரிய நகைகள், அணிகலன்கள், ஆபரணங்கள் தொடர்பான சுமார் 20 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. தமிழறிஞரும் சமயப் பேச்சாளருமான அமரர் வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அவர்கள், தமிழர் அணிகலன்கள் மற்றும் இந்துமத சம்பிரதாயச் சடங்குகள் ஆகியன குறித்து, சமய ரீதியானதும், மரபு ரீதியானதுமான அரிய தகவல்களை அவ்வப்போது வழங்க, இளம் ஊடகவியலாளராக வலம்வந்திருந்த திருமதி உமாசந்திரா பிரகாஷ், அவற்றினை அழகாகத் தொகுத்து, கலைக்கேசரியில் இரு வருடங்களுக்கு மேல் தொடராக எழுதிவந்திருந்தார். அக்கட்டுரைகளைத் தொகுத்தும், அதனுடன் வேறு சில கட்டுரைகளை இணைத்தும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார். அணிகலன்கள் ஓர் அறிமுகம், தமிழர் கலாசாரத்தில் குழந்தை அணிகலன்கள், மங்கையரின் பாதங்களை அணிசெய்யும் கொலுசும் மெட்டியும், கழுத்தணிகளும் மார்பணிகளும், இடுப்பணிகள், காதணிகள், உடலுக்கும் உறவுக்கும் சுகம்தரும் மோதிரம், மூக்கிற்கு அழகு மூக்குத்தி, தமிழர் வாழ்வியலும் வளையலும், அர்த்தமுள்ள திருமணமும் தாலியும், நன்மை பயக்கும் நவமணிகள், குணம் நிறைந்த மாணிக்கம், பெருமை அளிக்கும் முத்து, ஒளிவீசி வழிகாட்டும் வைரம், ஒளிரும் தன்மை கொண்ட மரகதம், நிறைவாய் மிளிரவைக்கும் நீலக்கல், மன அமைதியைத் தரும் கோமேதகம், தீ போன்று ஒளிவீசி மனதைக் கவரும் புட்பராகம், வைடூரியம், சகல செல்வங்களையும் நல்கும் பவளம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64692).

ஏனைய பதிவுகள்

Stwierdź Najlepsze Kasyno Sieciowy W Polsce

Jednocześnie warto wiedzieć, hdy kasyna bez depozytu na naszej ewidencji działają zarówno na systemie operacyjnym iOS, jak i Mobilne. Interfejs takiej witryny wyświetla się dokładnie

14121 காரைநகர் பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப ; பெருமான் தேவஸ்தானம் மஹாகும்பாபிஷேக மலர் 2003.

மலர்க் குழு. காரைநகர்: சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப் பெருமான் ஆலயம், பண்டத்தரிப்பான்புலம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx,38 பக்கம் +

14504 நடனம் (பரத நாட்டியம்).

சாரதாதேவி ஸ்ரீஸ்கந்தராஜா. திருக்கோணமலை: ஸ்ரீ சண்முக வித்தியாலயம், 56,உட்துறைமுக வீதி, உவர்மலை (கண்ணகிபுரம்), 1வது பதிப்பு, ஏப்ரல் 1991. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்). (10), 54 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14980 திருக்கோணேஸ்வரம் கையேடு: திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவேடு.

நினைவு மலர்க் குழு. திருக்கோணமலை: நாகராஜா கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). (30) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15 சமீ. திருக்கோணமலையைச் சேர்ந்த திருமதி

12369 – கல்வியியலாளன் ஆய்விதழ்: தொகுதி 05, ஒக்டோபர் 2016.

பரராஜசிங்கம் இராஜேஸ்வரன் (பிரதம ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கல்வியியல் வெளியீட்டுநிலையம் ((Educational Publication Centre), 55/3, விளையாட்டு மைதான வீதி, கல்வியங்காடு, 1வது பதிப்பு, ஐப்பசி 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 110 பக்கம், அட்டவணைகள்,

12828 – போரும் மனிதனும்.

ஏ.ஏ.ஜெயராஜா. வத்தளை: எம்.எம். பப்ளிக்கேஷன்ஸ், 1026/3, ரைபிள் ரேஞ்ச் வீதி, ஹுணுப்பிட்டி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 13