14396 ருது நூல் சாஸ்திரம்.

ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை. கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ நிரஞ்சனா அச்சகம், நல்லூர்). 24 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ. பூப்பு என்பது வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் மிகமுக்கியமான ஒன்றான இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் பக்குவப்படும் ஒரு நிலையாகும். இந்தப் பக்குவம் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படுகின்றது. இதன் போது உடல், உள ரீதியான பல மாற்றங்கள் இருபாலாரிடமும் ஏற்படுகின்றன. பூப்புக்குரிய இந்த மாற்றங்கள் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை. படிப்படியாகத்தான் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் பெண் குழந்தைகளிடம் அவர்களது 8-10 வயதுகளிலும், ஆண் குழந்தைகளிடம் 10-12 வயதுகளிலும் ஏற்படததொடங்குகின்றன. இந்நூல் பெண்களின் பூப்படைதல் தொடர்பான தமிழில் வெளிவந்த முதல் சாஸ்திர நூலாகக் கருதப்படுகின்றது. மூலநுலாசிரியர் பெயர் வழியாகவன்றி பதிப்பாளர்களின் பெயர்வழியாக அறியப்பெற்று ஏராளமான பதிப்புகள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், இலங்கையிலும் சரஸ்வதி புத்தகசாலையினரின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21884).

ஏனைய பதிவுகள்

14862 அனுபவத்தினூடே: கட்டுரைகள் விமர்சனங்கள்.

ஆ.கந்தையா. பருத்தித்துறை: சித்தம் அழகியார் வெளியீடு, ஞானாலயம், 117, வி.எம்.வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). v, 106 பக்கம், விலை: ரூபா