மு.மனோகரன். கொழும்பு 6: மு.மனோகரன், வானதி வெளியீடு, 100/16, றொபேட் குணவர்த்தன மாவத்தை, கிரிலப்பனை, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 6: வின்னர்ஸ் அச்சகம், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரிலப்பனை). vi, 70 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14.5 சமீ. இந்நூல் கிராமிய வழிபாட்டின் தோற்றம், கிராமிய வழிபாட்டில் சடங்குகள், கிராமிய வழிபாட்டில் பொதுத் தன்மைகள், கிராமிய வழிபாடு காணப்படும் பிரதேசங்கள், கிராமிய வழிபாட்டில் பொதுப் பண்புகள், கிராமிய வழிபாட்டில் சிறப்புப் பண்புகள், கிராமிய வழிபாடும் கலைகளும், கிராமிய வழிபாட்டில் ஆண் தெய்வங்கள், கிராமிய வழிபாட்டில் பெண்தெய்வங்கள், கிராமிய வழிபாட்டின் இன்றைய நிலை ஆகிய 10 தலைப்புக்களின் கீழ் இடைநிலை மாணவர்களின் கல்விப் பயன்பாட்டை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் மேல்மாகாண கல்விவள ஆலோசகராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45298). கிராமிய வழிபாடு. மு.மனோகரன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2018, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்). 85 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ. இவ்விரண்டாம் பதிப்பு 11 அத்தியாயங்களைக் கொண்டதாக உள்ளது. கிராமிய வழிபாட்டை ஆற்றுப்படுத்துபவர்கள் என்ற அத்தியாயம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 64500).