அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 188, டாக்டர் டெனிஸ்டர் டி சில்வா மாவத்தை). xvi, 218 பக்கம், விலை: ரூபா 550.,அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-9180-44-9. இந்நூலில் தமிழ்மூலம் சிங்கள மொழியைக் கற்பதற்கான 108 பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பழக்கமான உயிர் எழுத்துக்கள், உங்களுக்குப் பழக்கமில்லாத உயிர் எழுத்துக்கள், உங்களுக்குப் பழக்கமான எழுத்துக்கள், உங்களுக்குப் பழக்கமில்லாத எழுத்துக்கள் – வன்மையானவை, உங்களுக்குப் பழக்கமில்லாத மஹாப்ராண எழுத்துக்கள், உங்களுக்குப் பழக்கமில்லாத சஞ்ஞக்க எழுத்துக்கள், பூச்சியம், பூச்சியத்தின் பலம், தன்தஜ, மூர்த்தஜ எழுத்துக்கள் என இன்னோரன்ன 108 பாடங்கள் மூலம் எழுத்துச் சிங்களம் தமிழ்மொழி மூலம் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65462).