தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு: Smart Print Solutions Centre 230/15, கம்மல வீதி, கிரிவத்துடுவ, ஹோமாகம). xi, 252 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ. தமிழையும் சிங்களத்தையும் இரண்டாம் மொழியாகக் கொண்டு மொழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கேற்ற வகையில் இந்த தமிழ்-சிங்கள அகராதி தயாரிக்கப் பட்டுள்ளது. மாணவர் நன்மை கருதி அகராதியின் இறுதியில் இணைப்பாக இணைப்பிடைச் சொற்கள், இணைப்பிடைச் சொற்கள் உள்ள சில வாக்கியங்கள், இலக்கங்கள், இலக்கணச் சொற்கள், இரட்டைக் கிளவி, உடல் உறுப்புக்கள், உணவுப் பொருட்கள், உயிர்க்குறிகள், ஊர்வன, கிழமை நாட்கள், குடும்ப அங்கத்தவர்கள்-உறவுமுறை, சுவைகள், தானியங்கள், திசைகள், நிறங்கள், நிறுத்தக் குறியீடுகள், பதவிகள்/தொழிற் பெயர்கள், பழங்கள், பறவைகள், பாடங்கள், பூக்கள், பூச்சி இனங்கள், கடல்வாழ் உயிரினங்கள், மரங்கள், மரக்கறி/கீரை வகைகள், மாதங்கள், மிருகங்கள்/பிராணிகள், மூலிகைகள்/மருந்துப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், விழாக்கள், வினாச்சொற்கள், வினாச்சொற்கள் கொண்ட சில வாக்கியங்கள் ஆகிய 32 தலைப்புகளின் கீழ் சொற்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 64664).
Caribbean Stud Web based poker Laws How to Play Caribbean Casino poker
Blogs Adept or King – Adhere Their Laws Simple tips to Enjoy Caribbean Stud Poker – Beginner’s Book What’s the local casino advantage playing online