எஸ்.ஜே.யோகராஜா, டயனா குமாரி இத்தமல்கொட. ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, கோட்டே வீதி, 3ஆவது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2008, 2வது பதிப்பு, 2012. (கொழும்பு: அரச பதிப்பகத் திணைக்களம்). xi, 201 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955- 9180-23-4. அரசகரும மொழிகள் கொள்கையை பயனுள்ள வகையில் செயற்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலே பல வேலைத்திட்டங்கள் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக இந்நூல் வெளியீடும் அமைந்துள்ளது. தமிழ்அரச ஊழியர்கள் சிங்களப் பிரதேசங்களில் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை பேச்சுச் சிங்களத்தில் தேர்ச்சிபெறும் வகையில் இதிலுள்ள பாடத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. முதலாவது பகுதியில் எழுத்துக்களின் அறிமுகமும், இரண்டாவது பகுதியில் ஏற்கெனவே 1வது பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துக்களுக்குரிய சொற்களும் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியில் பேச்சுப் பயிற்சியும், நான்காவது பகுதியில் அதற்குரிய இலக்கணமும் விளக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பகுதியில் பொருத்தமான பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65459).
14734 அரங்கத்தில் நிர்வாணம்.
இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Tyristubbveien 77, 0687 Oslo, 1வது பதிப்பு மார்ச் 2016. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 132 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: