ஜே.பீ. திசாநாயக்க. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2017. (நுகேகொட: இமாஷி அச்சகம், இல. 96A, வனாத்த வீதி, கங்கொடவில). viii, 9-188 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 29.5×20.5 சமீ., ISBN: 978-955-9180- 43-2. அறிமுகம், பேசும் முறை, சொற்களஞ்சியம் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் எழுத்தாளராக பேராசிரியர் ஜே.பீ.திசாநாயக்கவும், தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் கணனித் தட்டெழுத்தாளர்களாக அரச கரும மொழிகள் திணைக்களத்தைச் சேர்ந்த திருமதி எம்.ஜீவராணி, செல்வி ஜே.பீ. பல்லவி ஆகியோரும், செவ்வை பார்த்தலில் திரு. எஸ்.சிவகுருநாதன் அவர்களும் உதவியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65463).
14843 சிந்தனைத் திடரில் சிதறிய துகள்கள்.
கண்ணன் கண்ணராசன். யாழ்ப்பாணம்: சாரல் வெளியீட்டகம், சித்தங்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). x, 89 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5