ஜே.பீ. திசாநாயக்க. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2017. (நுகேகொட: இமாஷி அச்சகம், இல. 96A, வனாத்த வீதி, கங்கொடவில). viii, 9-188 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 29.5×20.5 சமீ., ISBN: 978-955-9180- 43-2. அறிமுகம், பேசும் முறை, சொற்களஞ்சியம் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் எழுத்தாளராக பேராசிரியர் ஜே.பீ.திசாநாயக்கவும், தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் கணனித் தட்டெழுத்தாளர்களாக அரச கரும மொழிகள் திணைக்களத்தைச் சேர்ந்த திருமதி எம்.ஜீவராணி, செல்வி ஜே.பீ. பல்லவி ஆகியோரும், செவ்வை பார்த்தலில் திரு. எஸ்.சிவகுருநாதன் அவர்களும் உதவியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65463).
17354 அறிவியல் விளக்கம்.
இரா.செல்வவடிவேல். யாழ்ப்பாணம்: கணேசா வெளியீட்டகம், 2, சீனிவாசகம் வீதி, கொட்டடி, 6ஆவது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: சரவணாஸ் அழுத்தகம், 25, சிவன் பண்ணை வீதி). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.