நூலாசிரியர் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). x, 182 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-1948-02-3. அறிமுகம், அடிப்படைத் தமிழ் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள், பொது நிறுவனங்கள் பெயர் வரிசை, பொதுச் சொற்றொகுதி ஆகிய ஆறு பாடத்தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூலின் இறுதியில் பின்னிணைப்பும் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியை வாசிக்கவும் எழுதவும் உதவும் வகையில் அவற்றின் எழுத்து முறையில் தேர்ச்சியை ஏற்படுத்துவதே இந்நூலின் நோக்கமாகும். நூலாசிரியர் குழுவில் கே.என்.ஓ.தர்மதாச, ஜே.பீ.திசாநாயக்க, எஸ்.தில்லைநாதன், எம்.ஏ.நுஃமான், எஸ்.ஜே.யோகராசா, சந்தகோமி கோப்பறஹேவா, தினாலி பெர்னாந்து, விஜிதா சிவபாலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65464).
12714 – தமிழ்த் திரைப்படக் களஞ்சியம்: தொகுதி இருபத்தொன்று.
செ.ஜோர்ஜ் இதயராஜ், நிழல் எட்வேட் சந்திரா (தொகுப்பாசிரியர்கள்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, பே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, ஐப்பசி 1993. (கனடா M5S 2W9: ஜீவா