தமிழ் வளர்ச்சிக் கழகம். இலங்கை: தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, மே 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 59 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 20×14.5 சமீ. “தமிழ்ப் பெயர்க் கையேடு மக்கட்பெயர் 46000” என்ற நூலைத் தொடர்ந்து வெளிவரும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இரண்டாவது வெளியீடு இதுவாகும். நூலின் மேலட்டையில் “நடைமுறைத் தமிழ் வழிகாட்டி: அகரவரிசை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வட சொற்களும் திசைச் சொற்களுமாகக் காலம்தோறும் தமிழிடையே பிற சொற்கள் எண்ணுக்கணக்கற்று வந்து கலந்துள்ள நிலையில் நாள்தோறும் எம்மிடையே பேச்சிலும் எழுத்திலும் தமிழ்ச் சொற்களைக் கையாளத் தூண்டும் நோக்கில் இந்த வடசொல்-தமிழ்ச்சொல் அகரமுதலி (அகராதி) வெளியிடப்பட்டுள்ளது. இடப்புறம் தடித்த எழுத்துக்களில் உள்ள பிறமொழிச் சொற்களுக்கு எதிரே வலப்புறத்தில் மெல்லிய எழுத்துக்களில் தூய தமிழ்ச் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.
12874 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 2 (1983/1984).
ஜெ.ஜெயராஜ் (இதழாசிரியர்), இ.மதனாகரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1984. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி). 94 பக்கம், தகடுகள், புகைப்படங்கள்,