க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), திருமதி பி.ப.செல்வராஜகோபால் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான வீதி, தோற்றாதீவு, 1வது பதிப்பு, 1984. (தோற்றாதீவு: மனோகரா அச்சகம்). (8), 34+12 பக்கம், விலை: இந்திய ரூபா 5.00, அளவு: 21×14.5 சமீ. ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் எழுதியுள்ள நிகண்டு இதுவாகும். அவரது துணைவியார் செய்யுள்களுக்கான விளக்கவுரை தந்துள்ளார். ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை, உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்), அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்), தொழிற்பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்), இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்), கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்) என ஐந்து வகையாகப் பகுத்து இந்நூலை எழுதியிருக்கிறார். மட்டக்களப்பு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984 இல் முதல்பதிப்பும், 1987 இல் இரண்டாம் பதிப்பும் கண்டது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1024).
14471 சித்த மருத்துவம் 199/93.
எம்.மனோரஞ்சிதமலர் (இதழாசிரியர்), பி.பிரதீபா (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). (18), 44, xx பக்கம், தகடு, விலை: