14418 நீரரர் நிகண்டு.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), திருமதி பி.ப.செல்வராஜகோபால் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான வீதி, தோற்றாதீவு, 1வது பதிப்பு, 1984. (தோற்றாதீவு: மனோகரா அச்சகம்). (8), 34+12 பக்கம், விலை: இந்திய ரூபா 5.00, அளவு: 21×14.5 சமீ. ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் எழுதியுள்ள நிகண்டு இதுவாகும். அவரது துணைவியார் செய்யுள்களுக்கான விளக்கவுரை தந்துள்ளார். ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை, உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்), அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்), தொழிற்பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்), இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்), கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்) என ஐந்து வகையாகப் பகுத்து இந்நூலை எழுதியிருக்கிறார். மட்டக்களப்பு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984 இல் முதல்பதிப்பும், 1987 இல் இரண்டாம் பதிப்பும் கண்டது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1024).

ஏனைய பதிவுகள்

16871 குதுபுகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹீஸைனிய்யுல் ஹாஷிமிய் (ரலி).

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 63/A, புஹாரி மஸ்ஜித் வீதி, கல்பொக்க, வெலிகம, 2வது பதிப்பு, ஜீலை 2018, 1வது பதிப்பு, மே 2002. (திருச்சி 620 009: அவ்னிய்யா