ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: கா.தா. செல்வராசகோபால், மூலம்), பி.ப.செல்வராசகோபால் (தொகுப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், தோற்றாத்தீவு-2, 1வது பதிப்பு, 1984. (களுவாஞ்சிக்குடி: செ.இதயசோதி பெஞ்சமின், மனோகரா அச்சகம், தோற்றாத்தீவு). 40 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்புச் சொல்வெட்டு என்னும் நூலில் அறிஞர் ஈழத்துப்பூராடனார், மட்டக்களப்பில் வழக்கிலுள்ள சில சொற்கள் சங்க இலக்கிய நூல்களிலும் வழக்கிலிருப்பதைச் சிறப்பாக ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். சங்க இலக்கியச் சொற்களான கிளை, கல்லை வைத்தல், தூளியில் வைத்தல், முல்லைக்காரன், கடுக்கன், வண்ணக்கர், குடிதை, கட்டாடி, கட்டாடியார், பரிகாரி, பரிகாரியாள், கலத்திற் போடல், கால் மாறுதல், பரத்தை என்னும் சொற்கள் மட்டக்களப்புப் பகுதியில் எவ்வாறு இன்றும் வழக்கிலிருக்கின்றன என்பதை ஆராய்கின்றார்.