எப்.எக்ஸ்.சி.நடராஜா (இயற்பெயர்: பிரான்சிஸ் சேவியர் செல்லையா நடராசா). கொழும்பு: கலைமகள் கம்பெனி, 124 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1954. (சென்னை 1: ஸ்ரீமகள் அச்சகம்). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. “செந்தமிழ்” என்னும் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையின் நூலுரு இதுவாகும். வேற்று மொழிகளிற் பயின்றுவரும் கலைப்பொருளைச் செந்தமிழில் மொழிபெயர்த்துப் பயின்று வரும் வழக்கம் தமிழகத்திற்குப் புதியதன்று. வழி நூல்கள் தோன்றும் முறையை வகுத்துக் கூறு முகத்தான், ஒல்காப் புகழுடைத் தொல்காப்பியர் தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்ததர்ப்பட யாத்தலோடன மரபினவே என்று சூத்திரஞ் செய்துள்ளார். “மொழிபெயர்த்து அதர்ப் படயாத்தல்” என்ற முறைமைப் பிரகாரம் வழி நூல் தோற்றுதல் கூடுமென்பது ஆசிரியர் கருத்தாகும். அந்தக் காலத்தில் சங்கத மொழியினின்றும் பல நூல் கள் தமிழ் மொழியினதர்ப்பட, மொழிபெயர்க்கப்பட்டுண்டு. இந்தக் காலத்தில் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு, தமிழ் நூல்கள் ஆக்கப்பட்டு வருதல் கண் கூடு. ஆனால் அதர்ப்பட யாத்தல் நடைபெறுவது குறைவு. தற்காலத்தில் மொழிபெயர்க்கின்ற ஆசிரியர்கள் வார்த்தைக்கு வார்த்தை வைத்து மொழிபெயர்க் கின்றார்களேயன்றி நெறிப்பட யாத்துத் தமிழ்மரபு வழுவாது, வேற்றுமொழி கோரிய பொருளைப் போற்று தமிழில், சீரிய வார்த்தைகளிற் பொதிந்து தருகின்றார்களில்லை. மொழிபெயர்ப்புக் கலைக்கு, எடுத்துக்கொண்ட “இரு மொழி மரபினையும் அறிதல் வேண்டற்பாற்று.” (நூலாசிரியர்). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18945).