அ.க.சுப்பிரமணியம். கொழும்பு: அ.க.சுப்பிரமணியன், 43,கெஸ்பாவ வீதி, பொரளஸ்கமுவ, 1வது பதிப்பு, 1954. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், தபாற்பெட்டி இலக்கம் 1183). xvii, 107 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ. அர்ப்பணம், அணிந்துரை (சேவியர் தனிநாயகம்), சிறப்புரைகள் (சுவாமி ஜே. மதுரநாயகம், சு.நடேசபிள்ளை, சேர். கந்தையா வைத்தியநாதன், முதலியார் செ.சின்னத்தம்பி, ஆத்மஜோதி கௌரவ ஆசிரியர் க.இராமச்சந்திரன், ஏ.எம்.ஏ. அஸீஸ்), முன்னுரை (அ.சுப்பிரமணியம்) ஆகியவற்றுடன் தொடங்கும் இந் நூலில் மொழிக்கு காரணம் உணர்ச்சி, மொழிப்பெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு, கிறீஸ்துவப் பாதிரிமார் காட்டிய வழி, மொழி மரபு, கடிதங்களில் மரபு வழுவாமை, எழுத்திலக்கண நெறி பிறழாமை, எளிமையும் இனிமையும், சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு, கலைச் சொற்கள், மொழிபெயர்ப்பில் பிறமொழிக் கலப்பு, கிரந்த எழுத்துக்கள், முடிவுரை ஆகிய பன்னிரு இயல்களில் மொழிபெயர்ப்புக் கலை பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. கொழும்பு விவேகானந்த சபைப் புத்தகசாலையினரை (இல. 34, மேட்டுத் தெரு, கொழும்பு 13) ஏக விநியோகஸ்தராகக் கொண்டு இந்நூல் வெளியிடப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26763).