14424 இலங்கை மட்டக்களப்பு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மதிப்பீடு.

வே.அந்தனிஜான் அழகரசன். சென்னை 600015: தவத்திரு வே.அந்தனிஜான் அழகரசன், சின்னமலை ஆலயம், சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, ஜுலை 1976. (சென்னை 600005: வைரம் அச்சகம்). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 2.25, அளவு: 19×12 சமீ. மட்டக்களப்பில 1976ஆம் ஆண்டு பங்குனி 19,20,21 ஆம் நாட்களில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவலைகளின் பதிவு. 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தோற்றுவித்திருந்த எழுச்சி அலைகளால், பின்னாளில் தமிழர் பிரதேசங்களில் பல தமிழாராய்ச்சி மாநாடுகள் பிரதேச மட்டத்தில் நடைபெற்று வந்தன. அவ்வகையில் நடந்தேறிய மட்டக்களப்புத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடக்க விழா மட்டக்களப்பு மாநகர சபையிலும், ஆய்வுக் கருத்தரங்குகள் கல்லடிஉப்போடை விபுலாநந்தர் மணிமண்டபம், கோட்டைமுனை-ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றிலும் நடந்திருந்தன. இம் மூன்று நாட்களிலும் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி, பொதுமக்கள் கொண்டிருந்த எண்ணத்தை சீர்தூக்கிப் பார்ப்பதாக இந்நூல் அமைகின்றது. மாநாட்டில் கட்டுரைகளைச் சமர்ப்பித்த தமிழறிஞர்களின் புகைப்படங்களும் அவர்கள் பற்றிய பல தகவல்களும் இந் நூலில் வழங்கப்பட்டிருப்பது சிறப்பாகும். (இந்நூல் சென்னை 600113, தரமணி, ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84396).

ஏனைய பதிவுகள்

12708 – தமிழில் நாடகம்: கட்டுரைத் தொகுப்பு.

பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீடு, 54, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). (44) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.