14426 சுவாமி விபுலானந்தரின் தமிழியல் ஆய்வுகள்.

அம்மன்கிளி முருகதாஸ். மட்டக்களப்பு: சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை செயற்குழு, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை செயற்குழுவினால் நடத்தப்படும் பேருரை வரிசையில் இந்த உரை 11ஆவது தமிழியல் நினைவுப் பேருரையாகும். இது 24.08.2007 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையைச் சேர்ந்த கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் அவர்களால் ஆற்றப்பட்ட நினைவுப் பேருரை. சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரைகள் மட்டக்களப்பு புளியந்தீவு கிராமோதய சபையின் அனுசரணையுடன் அப்போது தலைவராகவிருந்த சிவநேசராஜாவின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வுரைத் தொடரின் முதலாவது உரையை இலக்கிய கலாநிதி எப். எக்ஸ்.சி. நடராஜா அவர்கள் நிகழ்த்தியிருந்தார். அவரைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் சி.தில்லைநாதன், சி.மௌனகுரு, மனோ சபாரத்தினம், அம்பலவாணர் சிவராஜா, எம்ஏ.நுஃமான், சி.பத்மநாதன், சித்திரலேகா மௌனகுரு ஆகியோரும் அருட்சகோதரி பஸ்டியனும் நிகழ்த்தியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Finest Slot Websites To possess 2023

Articles All of our Guide to Fastest Payouts And you can Quick Withdrawal Gambling enterprises No-deposit A real income Harbors Of many video game qualify

12938 – வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு இரா.சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர்-1993.

சபா.ஜெயராசா, செ.சோதிப் பெருமாள், பொ.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: செ.சோதிப் பெருமாள், செயலாளர், மணிவிழாக் குழு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: ஆ.டீ.Pசiவெநசளஇ 14, சிறில் சி. பெரேரா மாவத்தை). (10), 70 பக்கம், விலை: