சங்கரநமச்சிவாயப் புலவர் (விருத்தியுரை), சிவஞான சுவாமிகள் (திருத்தியவர்), ஆறுமுக நாவலர் (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், நல்லூர், மீள்பதிப்பு, ஐப்பசி 1947. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை). 292 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இவ்விருத்தியுரையானது திருநெல்வேலிச் சங்கரநமச்சிவாயப் புலவரால் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவஞானசுவாமிகளால் திருத்தப்பட்டது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பரிசோதித்தபடி அச்சிற் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கண நூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப் பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்துபோய்விட்டன, மற்றும் சிலவற்றிற்குக் காலக்கிரமத்தில் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் விருத்தியுரைகள் எழுதப்பட்டன. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தினை ஒட்டி எழுதப்பட்ட இந்நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர். இவை: பாயிரம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்பனவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35842).