க.சு.நவநீத கிருஷ்ண பாரதியார். யாழ்ப்பாணம்: க.சு.நவநீத கிருஷ்ண பாரதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழை, 1வது பதிப்பு, 1948. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.சண்முகநாதன் அண்ட் சன்ஸ்). (5), vii, 146 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. “எழுத்திலக்கணம்” என்ற முதலாவது பகுதியில் எழுத்து, எழுத்தின் வகைகள், சுட்டும் வினாவும், குற்றியல் உகரம், முற்றியல் உகரம், குற்றியல் இகரம், இன எழுத்துக்கள், மாத்திரை, முதல் நிலை, இறுதி நிலை, போலி, ஆகிய 11 பாடங்களும், “சொல் இலக்கணம்” என்ற இரண்டாவது பகுதியில் சொல், பகுபதம்-பகாப்பதம், சொற்களின் வகை, அல்வழி, வினைச்சொற்களுக்குப் பகுதி காணும் முறை, தெரிநிலை வினைச் சொற்களுக்கு வாய்ப்பாடு, சொல்லிலக்கணம் கூறல், உரைநடைப் பங்கீடு ஆகிய 8 பாடங்களுமாக மொத்தம் 19 பாடங்களும் அவற்றுக்கான 39 விளக்கப் பயிற்சிகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24947).