அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). (8), x, 206 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 25×19 சமீ., ISBN: 978-955-9180-39-5. இந்நூல் முதலாம் மட்ட அரசகரும மொழித் தேர்ச்சியில் சித்தியடைய வேண்டிய அரசகரும உத்தியோகத்தர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்களை முதலில் தராமல் உரையாடல் தரப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்குக் கடினமானதாக இருக்கலாம். ஆசிரியரின் உதவியோடு பேசப் பழகியிருக்கும் மாணவர்களுக்கு இது இலகுவாகவிருக்கும். முதலில் பேச்சுத்தமிழும் பின்னர் படிப்படியாக எழுத்துத் தமிழும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65467).