14434 உயர்வகுப்பு மாணவர்களுக்குரிய கட்டுரை எழுதுவது எப்படி?

பீ.பீ.அந்தோனிப்பிள்ளை. மன்னார்: நித்தியா புத்தக நிலையம், இல. 25, புதிய பஸ் நிலையம், 1வது பதிப்பு, ஆவணி 2001. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிரின்டர்ஸ்). v, 88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ. பரிசுபெற்ற கட்டுரைகள் உள்ளிட்ட 20 மாதிரிக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியது. கட்டுரை எழுதுவது எப்படி?அறிவியல் வளர்ச்சி, பத்திரிகைகள்- சஞ்சிகைகள், யுத்தமும் மனித உரிமைகளும், தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும், பாட்டுக்கொரு புலவன் பாரதி, தேசிய ஒருங்கிணைப்பு, உள்ளூராட்சி மன்றங்கள், சூழல் மாசடைதலில் எமது பங்கு, இசையின்பம், மக்களின் முன்னேற்றப் பாதையில் மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் பங்களிப்பு, சர்வதேச அரங்கில் பெண்களின் நிலை, மக்களை ஈர்க்கும் பேச்சுக்கலை, மதியை வளர்ப்போம் மதுவை ஒழிப்போம், முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர், சமூக வாழ்விலே இன்றைய மனிதர், புத்தாயிரம் ஆண்டில் புதுயுகம் படைக்கப் புறப்படு இளைஞனே, சேமிப்பும் வங்கிகளும், கல்விச் சிந்தனையாளர்களும் கல்விச் சீர்திருத்தமும், சிறுவர் உரிமையும் கடமையும் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26576).

ஏனைய பதிவுகள்

14425 இன்பத் தமிழும் இலங்கையரும்: நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடுஆய்வரங்க மலர் (இரண்டாம் பாகம்).

சதாசிவம் சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம், Institut International des Etudes Superieures, 70, Rue Philippe de Girard 75018, Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (தமிழ்நாடு: அச்சக விபரம்

14256 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை (இதழ் 4-2006).

கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன்